அனங்பூர் அணைக்கட்டு
அராயானாவில் உள்ள அணைக்கட்டுஇந்தியாவின் ஹரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் அனக்பூர் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள அனங்பூர் அணை மிகவும் பிரபலமான சூரஜ்குண்டிலிருந்து 2 கிலோமீட்டர்கள் (1.2 mi) தொலைவு தூரத்தில் அமைந்துள்ளது. இந்த தனித்துவமான இந்திய நீரியல் பொறியியல் அமைப்பு 8 ஆம் நூற்றாண்டில் தோமரா வம்சத்தின் மன்னர் அனங்பாலின் காலத்தில் கட்டப்பட்டது. இந்த இடத்தை தில்லியில் இருந்து டெல்லி - மதுரா சாலை வழியாக அணுகலாம். அனங்பூரில் காணப்படும் காப்பரண்களின் இடிபாடுகள் இது 8 ஆம் நூற்றாண்டில் தில்லியின் முதல் நகரமாக உருவாகியிருந்த லால் கோட்டின் பகுதியாக இது இருந்திருக்கக்கூடும் என்ற அனுமாதத்தை நிறுவுகிறது. இது வடக்கு ஆரவல்லி சிறுத்தை வனவிலங்கு தாழ்வாரத்திற்குள் ஒரு முக்கியமான பல்லுயிர் பகுதியாகும். இது சரிஸ்கா தேசியப் பூங்காவிலிருந்து டெல்லி வரை நீண்டுள்ளது. சரணாலயத்தைச் சுற்றியுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் பட்கால் ஏரி, 10 ஆம் நூற்றாண்டின் பண்டைய சூரஜ்குண்ட் நீர்த்தேக்கம், டம்டாமா ஏரி, துக்ளகாபாத் கோட்டை மற்றும் ஆதிலாபாத் இடிபாடுகள், சதர்பூர் கோயில் (டெல்லி) ஆகியவை ஆகும். இது பருவகாலங்களில் மட்டும் தோன்றும் பரிதாபாத்தின் பாலி-தெளஜ்-கோட் கிராமங்களில் நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் உள்ளது. புனித மங்கர் பானி மற்றும் அசோலா பட்டி வனவிலங்கு சரணாலயம் ஆகியவையும் அருகில் உள்ளனது. இப்பகுதியில் கைவிடப்பட்ட திறந்த சுரங்கக் குழிகளில் பல்வேறு ஏரிகள் உள்ளன.

